ரஸ்யா மற்றும் யுக்ரேன் இடையே கடல்பகுதியின் நடந்த மோதலை தொடர்ந்து ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திப்பதாக இருந்த தனது திட்டத்தை ரத்து செய்யக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று யுக்ரேனின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஸ்யா கைப்பற்றியிருந்த நிலையில் இருநாடுகளுக்குமடையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையிலே டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த யுக்ரேனின் மூன்று கடற்படை கப்பல்களை ரஸ்யா கைப்பற்றியமை தொடர்பில் முழு தகவல் அறிக்கையை படிப்பதற்கு தான் காத்திருப்பதாகவும் டிரம்ப் வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்தின் பிற்பகுதியில் வெய்னோ ஐரிஸில் நடக்கவுள்ள ஜி20 உச்சி மாநாட்டின் இடையே ட்ரம்பும் புட்டினும் சந்திப்பதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை யுக்ரேன் மற்றும் ரஸ்யாவுக்கிடையான பிரச்சனையில், யுக்ரேனை ஐரோப்பிய நாடுகள் ஆதரிக்க வேண்டுமென அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஸ்யா மீது கடுமையான தடைகள் அமுல்படுத்தப்பட வேண்டும் என் அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டின் அரச துறை பேச்சாளரான ஹீதர் தெரிவித்துள்ளார்.