152
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டா இலங்கைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் இலங்கை வந்துள்ள அவர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஜனாதிபதி மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரி யமஷிட்டா நேபாளம், ஜப்பான், குரோஷியா மற்றும் ஆர்மோனியா உட்பட பல நடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love