தூத்துக்குடியில் லை மீண்டும் இயங்க 25 நிபந்தனைகள் விதிக்க நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ஸ்டெர்லைட் நிர்வாகம், ஆலை வளாகம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீரில் ஆர்சீனிக், காட்மியம், வெள்ளி, தாமிரம், ப்ளூரைடு ஆகியவை அடங்கியுள்ளனவா என்பதை ஆய்வு செய்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மாதம் ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான சோதனை மாதிரிகளை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் எடுக்க வேண்டும்.
ஆலையில் வெளியேறும் திடக்கழிவுகளை கண்காணிக்க மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும்.
இந்த குழுக்களின் அறிக்கைகள் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும்.
உப்பாறு நதிப் படுகையில் 11 இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தாமிர துகள்கள் அகற்றப்படவேண்டும் என்பதுடன் எந்தவகையான கழிவுகளையும் அகற்றுவதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறவேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை இயங்கும் இடத்தை சுற்றி 25 மீற்றர் சுற்றளவுக்கு பல்வேறு மரங்களை நட்டு பசுமைப்பகுதியை உருவாக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன