அலரிமாளிகைச் செலவுகள் UNPயின் கணக்கில்….
ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஸ தரப்பினரின், இடைக்காலக் கணக்கறிக்கைக்கு எதிராக, ஐக்கிய தேசிய முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரனையை நிறைவேற்றிக்கொண்ட பின்னர், அலரி மாளிகையிலிருந்து, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் வெளியேற வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தி உள்ளார்.
இடைக்காலக் கணக்கறிக்கை குறித்து சபையில் உரையாற்றிய அவர், அலரிமாளிகையில் அவர்கள் செய்யும் செலவுகளையும், பொதுமக்களின் வரிப் பணத்தைக் கொண்டே செலுத்த வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த, ஐ.தே.வின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, அலரி மாளிகையின் செலவுகள் (மின்சாரம், நீர், இதர செலவுகள்), ஐ.தே.கவினராலேயே செலவிடப்படுவதாகவும், இதற்கு, பொதுமக்களின் பணம் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.