குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பொது மக்கள் அன்றாடம் எதிர் நோக்கும் பிரசினைகளை விரைவில் நிவர்த்தி செய்யக் கோரி இன்று வியாழக்கிழமை காலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் உருவாக்கப்பட்ட வளர்பிறை பெண்கள் தலைமைத்துவ அமைப்பின் எற்பாட்டில் குறித்த மகஜர் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சிங்கள வைத்தியர்கள் அதிகமாக இருப்பதால் மக்களால் நோய்களை தெளிவாக வைத்தியர்களிடம் வெளிபடுத்த முடியாமை,தகுந்த சிகிச்சைகள் வழங்குவதற்க்கு தகுந்த வசதி இன்மை,நோயின் தன்மையை நோயாளருக்கு வெளிப்படுத்தாமை ,நோய் தன்மைக்கு ஏதுவாக இல்லாமல் சக்தி வாய்ந்த மருந்துகளை வழங்குதல், இறந்த உடல்களை வெகு விரைவில் உரியவர்களிடம் ஒப்படைத்தல்,நோயாளர்களை பார்வையிடும் நேரத்தில் தொலைபேசி பாவனை போன்ற குறைபாடுகளை மக்கள் தொடர்ந்தும் எதிர் நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அது மட்டும் இன்றி இப் பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுத்து ஆதர பூர்வமாக அனுபவித்து தீர்வு கோரி இப்பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய கோரி மன்னார் மாவட்டத்தில் 1000 பொது மக்களிடம் ஒப்பம் பெற்றுக் கொள்ளப்பட்டடிருந்தது.
குறித்த மகஜர் மாவட்ட சுகாதர பணிமை திட்டமிடல் பிரிவுக்கு பொருப்பான வைத்தியரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.