சபாநாயகர் கரு ஜயசூரியவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இன்று மாலை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுதலின் அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வினை ஆளுந்தரப்பினர் புறக்கணித்த நிலையில் அமர்வில் கலந்து விஜயதாஸ ராஜபக்ஸ வெற்று கதிரைகளுக்கு மத்தியில் நின்று கொண்டு, அரசியல் நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதனால் பாராளுமன்ற வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு ஜனாதிபதியுடன் பேசி சபாநாயகர் நாடு எதிர் நோக்கியுள்ள பிரச்சினைக்கு ஒரு முடிவை காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
அத்துடன் பிரச்சினைக்கு தீhவு காண்பதில் ஜனாதிபதி விருப்புடன் இருக்கிறார் என்பதனை தான் அறிவேன் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். அதற்கு பதரிலளித்த சபாநாயகரும் விஜேதாஸ ராஜபக்ஸவின் ஏற்பதாகவும் தானும் ஜனாதிபதியை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கமையவே இன்று மாலை சபாநாயகரும் ஜனாதிபதியும் சந்திக்கவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.