196
நயினாதீவில் அமைந்துள்ள பாடசாலைகளில் கல்வி பொதுத் தராதார சாதாரண தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்குகள் பெருமளவான மாணவர்கள் பங்கேற்புடன் நடைபெற்றன. நயினை மைந்தர்கள் குழுமத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட வித்தியாலயத்தில் இக் கருத்தரங்குகள் அண்மையில் இடம்பெற்றன.
கணிதம், விஞ்ஞானம் ,ஆங்கிலம் மற்றும் சித்திர பாடங்களுக்கான கருத்தரங்குகள் கடந்த அக்டோபர் 27ம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 18 ஆம் திகதி நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love