வவுண தீவில் இரு காவற்துறை உத்தியோகத்தர்களும் அவர்களின் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்த இரு துப்பாக்கிகளையும் கொலையாளிகள் எடுத்துச்சென்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது
மட்டக்களப்பு வவுணதீவு காவற்துறை வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த காவற்துறையினர் இருவரையும் இனந்தெரியாதோர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த இரு கைத்துப்பாக்கிகளை எடுத்துச் சென்றுள்ளனர். இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு காவற்துறையினர் தெரிவித்தனர். கல்முனை நீலாவணையைச் சேர்ந்த காவற்துறை கான்ஸ்டபிள் தினேஸ் மற்றும் காலியைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
காவற்துறை உத்தியோகத்தர்கள், தினேஸ், பிரசன்னா, வவுணத்தீவில்சடலங்களாக மீட்பு…
Nov 30, 2018 @ 03:02
மட்டக்களப்பு வவுணத்தீவில், காவற்துறை உத்தியோகத்தர்கள் இருவரின் சடலங்களை, வவுணத்தீவு காவற்துறையினர், இன்று (30.11.18) காலை மீட்டுள்ளனர். இந்த இருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர் என, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வவுணத்தீவு காவற்துறை நிலையத்தில் கடமையாற்றி வந்த தினேஸ், பிரசன்னா ஆகிய இருவரே, இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். வவுணத்தீவு சோதணைச் சாவடியில், நேற்று (29.11.30) இரவு நேர கடமையில் இருந்தவேளை, மேற்படி இருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர் என்றுத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி சோதனைச் சாவடிக்கு, காலை நேர கடமையைப் பொறுப்பேற்தற்காகச் சென்ற காவற்துறை உத்தியோகத்தர், இருவரின் சடலங்களை கண்டு காவற்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து சடலங்களை மீட்ட காவற்துறையினர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக பிரேத அறையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரேதப் பரிசோதனைக்காக தெரிவித்துள்ளனர்
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் விசாரிக்க விஷேட குழுவொன்று மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவற்துறை அத்தியட்சகர் ஒருவரின் தலைமையிலான குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது. காவற்துறை மா அதிபரின் பணிப்புரையின் படி இந்தக் குழு அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
பாறுக் ஷிஹான்