அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய போதே இந்தப் பிரேரணை சமர்பிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆமோதித்து வழிமொழிந்தார்.
இந்தப் பிரேரணையானது, நாடாளுமன்ற உறுப்பினர்களான, ராஜித்த சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க, மனோ கணேசனும் ஜயம்பதி விக்கிரமரத்னவும் இணைந்தே கொண்டுவந்தனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதென, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதி தொடர்பான அனைத்து அதிகாரங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கே உள்ளதென, இந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.