405
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி செயன்முறை தொழினுட்ப மன்றத்தினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படுகின்ற செயன்முறைத் தொழில்னுட்பத் திறன்கள் கண்காட்சி கல்லூரி அதிபர் தலைமையில் 30.11.2018 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.
கண்காட்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், அயற் பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களின் பல்வேறு துறை சார் புத்தாக்கங்கள் வெளிக்கொணரப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதனை மன்ற பொறுப்பாசிரியர் க.சுவாமிநாதனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
Spread the love