168
செவிப்புலனற்றோருக்கான சர்வதேச இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெற்ற நிலையில் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து 146 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17.5 ஓவர்களை மாத்திரம் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 36 ஓட்டங்களினால் தோல்வியை சந்தித்தது.
Spread the love