குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த காவல் நிலைய அதிகாரிகளுக்கு தொல்பொருள் திணைக்கள சட்டஒழுங்கு சம்மந்தமான விரிவுரை ஒன்று 29.11.18 அன்று ஒட்டுசுட்டான் காவல் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் சட்ட ஒழுங்கு சம்மந்தமாக காவல் திணைக்களத்தினை சேர்ந்த தொல் பொருளுடன் சம்மந்தப்பட்ட 85 காவல்துறை அதிகாரிகளுக்கு தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஸ்ர சட்டத்தரணி றோகண காரியவசம் அவர்கள் கலந்துகொண்டு விரிவுரைகளை நடத்தியுள்ளார்.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட காவல் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஜ.குணரத்ன,மாவட்ட மக்கள் காவல்துறைப்பிரிவு அதிகாரி எஸ்.ஜ.அனுர உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்திலே அதிகளவு தொல்பொருள் இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை , தொல் பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகளை முனைப்புடன் செயற்படுத்த காவல்துறையினருக்குருக்கு தொல்பொருள் திணைக்களத்தின் சட்ட நடவடிக்கை குறித்தான விரிவுரைகள் வழங்கப்பட்டுள்ளமை தொல்பொருள் திணைக்களம் தனது நடவடிக்கையினை முனைப்புடன் செயற்படுத்தவுள்ளமை அறியமுடிகின்றது