180
யாழ்ப்பாணத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பேரணி ஒன்று இன்று(1) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியானது வின்சன் திரையரங்கு வீதியில் இருந்து ஆரம்பமாகி கஸ்தூரியார் வீதியூடாக சென்று யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிறைவடைந்தது.
இதன் போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் மக்கள் ஆணைக்கு அனுமதி என்னும் தொனிப்பொருளில் பல்வேறு கருத்துக்களை ஊடகங்களிடம் தெரிவித்தனர். மேலும் குறித்த பேரணி கொட்டும் மழையில் இடம்பெற்றதுடன் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களும் முஸ்லீம் மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
பாறுக் ஷிஹான்
Spread the love