எரிபொருள் வரி உயர்த்தப்பட்டதால் பல்வேறு பொருள்களின் விலை உயர்ந்துள்ளதனையடுது பிரான்சில் கடந்த 3 வாரங்களாக மக்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் காவல்துறையினருக்கு எதிரான வன்முறையாக மாறியுள்ள நிலையில் வன்முறைக்கு வழிவகுத்தவர்கள் மீது முழுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதித் துறை அமைச்சர் நிக்கோலே பெல்லுபெட் உறுதியளித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு கூட்டம் நடத்துவதற்கு முன்னதாக பாரிசில வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட இடங்களை அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அண்மையில் வெடித்த வன்முறையால் 23 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் நானூறுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.