இலங்கை பிரதான செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…

தமிழ் அரசியல் கைதிகளின் விடயமானது வெறுமனே சட்டரீதியாக நோக்கப்படலாகாது என்றும் இது ஒரு அரசியல் பிரச்சினையாகும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை (03.12.18) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், மற்றும் காவற்துறை திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், அத்துடன் 70 ஆம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியினரின் போராட்டங்களை எடுத்துரைத்த இரா சம்பந்தன் தொடர்பில் ஒரு அரசியல் தீர்மானம் எடுக்கப்பட்டது போல இந்த விடயமும் நோக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தினார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொலை முயற்சியின் சந்தேக நபரை ஜனாதிபதி, பொது மன்னிப்பு கொடுத்து விடுவித்ததனை எடுத்துக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், இந்த கைதிகள் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் சரியான நடைமுறைகளை மேற்கொண்டு இவர்களை விடுவிப்பதற்கான வழிமுறைகளை ஜனாதிபதிக்கு முன்மொழிய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பல வருடங்களாக சிறையில் வாடும் இந்த கைதிகளின் மனைவிமார்,குழந்தைகளின் பரிதாபமான நிலைமையினை விளக்கி கூறிய இரா. சம்பந்தன் அவர்கள் கலா தாமதம் இல்லாமல் இந்த கருமங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என வேண்டிக்கொண்டார்.

இதன்போது கருது தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பல நாடுகளில் இப்படியான பிரச்சினைகளிற்கு அரசியல் தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன என்றும் இந்த கைதிகள் விடயத்திலும் அவ்வாறான முடிவு எட்டப்படவேண்டும் எனவும் தெரிவித்த அதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இன்னும் இரண்டு வாரங்களில் தேசிய பாதுகாப்பு சபை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியோருடன் கலந்துரையாடி ஒரு தீர்வினை பெற்று தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

Spread the love
 •   
 •   
 •   
 •   
 •  
 •  
 •  
 •  

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

 • அரசியல் கைதிகள் தொடர்பில், இன்னும் இரு வாரங்களில் தேசிய பாதுகாப்புச் சபை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியோருடன் கலந்துரையாடி ஒரு தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கும் ஜனாதிபதி, முன்பு எத்தனை தடவைகள் குறித்த தரப்பினருடன் ஆலோசனைகளை மேற்கொண்டார்? இன்னும் எத்தனை தடவைகள் இவர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டாலும், என்றைக்கும் எந்தத் தீர்வினையையும் இவர் பெற்றுத்தர மாட்டார். இதற்கு, இன்றைய அரசியல் நிலைமைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ளாத தரப்புக்கள் எதுவுமில்லை என்றபோதும், இன்று வரை இவரால் எந்தவொரு தீர்வையும் முன்வைக்க முடியவில்லை, என்பது ஒரு மிகச் சிறந்த உதாரணமாகும்.

  அது என்ன தீர்வினைப் பெற்றுத் தருவது? இவரிடம் தீர்வு கேட்டால், இவரென்ன கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லுகின்றார்? ஆக, நரம்பில்லா நாவால், பொய்களை மட்டுமல்ல, தனது இயலாமையையும் சொல்லுகின்றாரோ? தனக்கிருக்கும் பதவிக்காலமான ஒரு வருடம் முழுக்க இதைத்தான் செய்யப்போகின்றார், என்பதே உண்மை.