மேந்கிந்தியதிவுகள் அணியின் வீரர் கிரிஸ் கெய்லுக்கு பேர்பக்ஸ் நிறுவனம் 3 லட்சம் டொலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என அவுஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது மேந்திந்திய தீவுகள் அணியின் உதவி மசாஜ்தெரபிஸ்டாக பணியாற்றிய பெண், அணியினர் தங்கி இருந்த அறைக்குள் சென்ற போது கிறிஸ் கெய்ல் ஆபாசமாக பேசியதாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த பேர்பக்ஸ் மீடியா குழுமம் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனை அடுத்து கெய்ல், அவுஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் பேர்பக்ஸ் மீடியா குழுமம் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்த நிலையில் கெய்ல் மீதான குற்றம்சாட்டு நிரூபிக்கவில்லை என கடந்த ஒக்டோபர் மாதம் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனையடுத்து நேற்றையதினம் கெய்லுக்கு பேர்பக்ஸ் நிறுவனம் 3 லட்சம் டொலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக அப்பீல் செய்யப்போவதாக பேர்பக்ஸ் மீடியா குழுமம் தெரிவித்துள்ளது.