பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர், தனது நண்பரை வேண்டுமென்றே தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கவைத்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார் , உஸ்மான் கவாஜாவின் சகோதரரான 26 வயதான அர்சகான் கவாஜாவுக்கும் அவரது பல்கலைக்கழக நண்பர் முகமது கமீர் நிஜாமுதீன் என்பவருக்கும் ஒரு பெண்ணை காதலிப்பதில் போட்டி எழுந்துள்ளது.
இதனையடுத்து, அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல்லை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக அர்சகான் கவாஜா முஐறப்பாடு செய்துள்ளதுடன் அது தொடர்பாக நிஜாமுதீன் டைரியிலும் கொலைத்திட்டத்தையும் விளையாட்டாக எழுதிவைத்தார்.
இதையடுத்து, நிஜாமுதீனை கடந்த ஓகஸ்ட் மாதம் காவல்துறையினர் கைது செய்திருந்தநிலையில் தனக்கும், சதித்திட்டத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நிஜாமுதீன் மறுத்தார். அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது டையரியில் இருந்தது நிஜாமுதீன் கையெழுத்து இல்லை என்பதை உறுதி செய்து அவரை விடுவித்தனர். இதனையடுத்து தற்போது அர்சகான் கவாஜாவை கைது செய்துள்ளனர்.