குஜராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது இடம்பெற்ற போலி என்கவுன்ட்டர்கள் குறி்த்து உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறி்க்கையைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த நான்காண்டு காலத்தில் 22 போலி என்கவுன்ட்டர்கள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு குழுவினை அமைத்து அதன் அறிக்கையானது குஜராத் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்குகள் நீண்டகாலமாக விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருந்தன.
இந்தநிலையில் அண்மையில் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்ற ரஞ்சன் கோகாய் நிலுவையிலிருக்கும் அனைத்து வழக்குகளும் விரைவில் விசாரித்து முடிக்கப்படும் என்று அறிவித்திருந்ததன் அடிப்படையில், நேற்று நீண்டகாலமாக நிலுவையிலிருந்த குஜராத் என்கவுன்ட்டர்கள் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போதே நீதிபதிகள் 22 போலி என்கவுன்ட்டர்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ககுழுவின் அறி்க்கையை மனுதாரர்களுக்கு அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.