145
மேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான நவுசர் பௌசி, கீர்த்தி காரியவசம் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருவரும் தமது தீர்மானம் தொடர்பில் சபையில் தௌிவுபடுத்தியுள்ளனர். தற்போதுள்ள நிர்வாகத்தினருடன் தம்மால் பணிபுரிய இயலாது என்பதால் எதிர்க்கட்சியில் அமர்ந்ததாக கீர்த்தி காரியவசம் இதன் போது தெரிவித்துள்ளார். ஆளும் கூட்டமைப்பு மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Spread the love