பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் தொடர்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இதேவேளை இந்த மனு மீதான விசாரணையில் தலையீடு செய்வதற்கு அனுமதி வழங்கக் கோரி அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி, லக்ஷ்மன் வசந்த பெரேரா, பவித்ரா வன்னியாராச்சி, சிசிர ஜெயகொடி, சந்திரசிறி கஜதீர, ஜோன் செனவிரத்ன உள்ளிட்ட 10 பிரதிவாதிகள் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.