151
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் யுத்தமோ பயங்கரவாதமோ வேண்டாம் என எழுதப்பட்ட பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மற்றும் முல்லியவெளிப் பகுதிகளிலேயே மேற்படி சுவரொட்டிகளை காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அண்மையில் மட்டக்களப்பு, வவுணத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை சிவில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love