153
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு கோட்டை நீதவான ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார். 11 இளைஞர்களைக் கடத்தி காணாமலாக்கிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவரை கைது செய்தது. இதனையடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love