பாபர் மசூதி இடிக்கப்பட்ட 26-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அயோத்தி நகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது . உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6ம் திகதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில் இன்று அதன் 26-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரித்து இந்து அமைப்புகளும் கண்டித்து முஸ்லிம் அமைப்புகளும் ஊர்வலம் பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளன. இதை கருத்தில் கொண்டு அயோத்தி நகரில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
2500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடி படையினர், துணை ராணுவத்தினர் ஆகியோர் சர்ச்சைக்குரிய பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அயோத்தி நகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது