பாகிஸ்தான் ஹொக்கி அணியின் உதவி பயிற்சியாளர் டெனிஷ் கலீம் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக கிண்ண ஹொக்கி போட்டியில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் அணியின் உதவி பயிற்சியாளர் டெனிஷ் கலீம் அடையாள அட்டை இல்லாமல் வீரர்கள் இருக்கும் இடத்துக்கு செல்ல முயன்ற போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்த போது அவர் அவர்களிடம் அதிகார தோரணையில் நடந்து கொண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஹொக்கி இந்தியா அமைப்பு சார்பில் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தொழில்நுட்ப பேரவையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடந்து இது தொடர்பில் இன்றையதினம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்பாராதவிதமாக டெனிஷ்; தன்னுடைய அடையாள அட்டையை மறந்து உடைமாற்றும் அறையில் வைத்து விட்டு சென்று விட்டார். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் தரக்குறைவாக நடந்து கொண்டுள்ளனர் என பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் தாகீர் அகமது தர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக் போட்டியில் நாளை நெதர்லாந்தை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது