167
தான் பதவியை எதிர்பார்த்து அரசியல் செய்யவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தற்போதைய அரசியலில் ஒருவகை குழப்ப நிலை உள்ளதாகவும் அந்த குழப்ப நிலையை சரி செய்வதற்கு மக்கள் எதிர்பார்ப்பது பொதுத் தேர்தலையே எனவும் தெரிவித்துள்ளார்.
கோட்டே ஸ்ரீP கல்யாணி சாமஸ்ரீ தர்ம சபையின் இத்தேபானே தம்மாலங்கார தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்ட மகிந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் பதவிகளை எதிர்பார்த்துக் கொண்டு அரசியலில் ஈடுபடுவதில்லை எனவும், கடந்த காலங்கில் பதவி இல்லாமலும் தாம் அரசியல் செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Spread the love