169
இலங்கை அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ரிக்சன் நியமிக்கப்பட்டுள்ளார். நீண்டகால பயிற்றுவிப்பு அனுபவத்தை கொண்டுள்ள ரிக்சன் தற்போது நியுசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அவர் 2019 உலக கிண்ணப்போட்டிகள் வரை அணியுடன் இணைந்திருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . பாகிஸ்தான் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக பணியாற்றியிருந்த ஸ்டீவ் ரிக்சன் அந்த அணியின் களத்தடுப்பினை திறனாக மாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love