ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய சதி செய்யும் விதமாக தொலைபேசியில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் காவற்துறைமா மா அதிபர் நாலக சில்வாவும், காவற்துறை உளவாளி நாமல் குமாரவும் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படும் விடயங்கள் நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவ் ஒலிப்பதிவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக குழு ஒன்று ஹொங்கொங் சென்றுள்ளது.
இந்த குழுவில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட அரச இராசயன பகுப்பாய்வாளர் ஒருவரும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காவல்துறை ஊடக பிரிவினர் அறிக்கை ஒன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ளனர்.
நாமல் குமாரவின் தொலைபேசியுடன் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவையும் எடுத்துக் கொண்டு நேற்று (08) இரவு குறித்த மூவரும் ஹொங்கொங் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.