பிரான்ஸில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் 179 பேர் காயமடைந்த நிலையில் 1,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நேற்றைய தினமும் அங்கு போராட்டம் நடைபெற்றுள்ளது.
கடந்த 1-ம் திகதி தலைநகர் பாரிஸ் உட்பட பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கானோர் மஞ்சள் ஜக்கெட் அணிந்து போராட்டத் தில் ஈடுபட்டதுடன் பல இடங்களில் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப் பட்டன. இதையடுத்து எரிபொருள்; வரி உயர்வை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்படம்டிருந்தது.
எனினும், மேலும் பல சலுகைகளை அறிவிக்கக் கோரி சனிக்கிழமை மஞ்சள் ஜக்கெட் அணிந்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன் தண்ணீர்பிரயோகமும் மேற்கொண்டனர். இதனையடுத்து போராட்டக்காரர் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
மேலும் நள்ளிரவு வரை போராட்டம் நீடித்த நிலையில் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1,700 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மோதலில் 179 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் பிரான்ஸில் நேற்றும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. எனினும் சனிக்கிழமை அருங்காட்சியகங்கள், ஈபிள் டவர் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வழக் கம்போல் திறக்கப்பட்டிருந்தன.
இதேவேளை பாரிஸ் நகரில் நிலைமை தற்போது கட்டுக்குள் வந்துள்ளது என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கிறிஸ்டோப் காஸ்டனர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.