189
லிபியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடத்தி பணயக் கைதிகளாக வைத்திருந்த 6 பேரை ஐஎஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
லிபியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் ஜாப்ரா மாவட்டம் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் அந்த பகுதியை கடந்த ஆண்டு ராணுவம் கைப்பற்றியது. அந்த பகுதியில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்ற ஐஎஸ் அமைப்பினர் கடந்த ஒக்டோபர் மாதம் ஜாப்ரா மாவட்டத்தில் மேற்கொண்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதுடன் 10 பேரை சிறைபிடித்துச் சென்றனர். இந்நிலையில், கடத்தப்பட்ட 10 பேரில் 6 பேரை அவர்கள் படுகொலை செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love