மதுரையில் பிளாஸ்டிக் மீதான தடை இன்று முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கினால் உருவான பைகள் கோப்பைகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த ஏற்கனவே தமிழக அரசு தடை விதித்துள்ளது. 50 மைக்ரோன்களுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க, வைத்திருக்க மற்றும் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிளாஸ்டிக் மாசில்லாத தமிழகம் என்பதை உருவாக்க, விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த திங்கள்கிழமை ஆரம்பித்து வைத்துள்ளார். இந்தப் பிரசார வாகனம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது