பருத்தித்துறை பிரதேச செயலகம் நடத்தும் கலை இலக்கியப் பெருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்வுகள் (11.12.2018) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு செல்வச்சந்நிதி செல்லையா ஐயர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தலைமைக் கிராம அலுவலர் எஸ். சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலனும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசனும் கலந்து கொண்டனர். கலாசார உத்தியோகத்தர் பொன்.சுகந்தன் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.
.
சைவப்புலவர் கலாபூஷணம் ச.உருத்திரேஸ்வரன், கலாபூஷணம் வெ. முத்துச்சாமி ஆகியோர் நாடகத்துறைக்கு வழங்கிய பங்களிப்புக்களுக்காகவும் செல்வச்சந்நிதி அறநெறிப்பாடசாலை அதிபர் தமிழ்ச்செல்வி மதியழகன் இளம் பிள்ளைகளை கலைத்துறையின்பால் வழிப்படுத்தும் சிறப்பிற்காகவும் கௌரவிக்கப்பட்டனர்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தால் பதினொரு நாட்களுக்கு விழா தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்விழா பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் வெவ்வேறு ஊர்களில் நடத்தப்படுகின்றது.