மதுரை மத்திய சிறையில் கடந்த 2 ஆண்டுகளில் கைதிகளின் மரணம் அதிகரித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ‘இந்தியன் குரல்’ என்ற அமைப்பைச் சேர்ந்த எம்ஜி. மோகன் என்பவர் மதுரை மத்திய சிறை குறித்து 11-க்கும் மேற்பட்ட தகவல்களை கேட்டிருந்த நிலையில் அதற்கு சிறைச்சாலை நிர்வாகம் பதிலளித்துள்ளது.
இதன் மூலம் 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் கைதிகளின் மரணம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் உடல்நலம் பாதிப்பால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி யாரும் இறக்கவில்லை என, பொது தகவல் அளிக்கும் அலுவலர் தெரிவித்துள்ளார்.