டைம்ஸ் பத்திரிகையின் இந்த ஆண்டுக்கான சிறந்த நபர்கள் பட்டியலில் கொல்லப்பட்ட சவூதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசாக்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்த நாகரிகமான விமர்சகர் கசாக்கி எனவும் அவர் சவூதி இளவரசர் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுவதாகவும் ஜமால் கசாக்கியை தெரிவு செயதமை தொடர்பில் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது
சவூதி அரசையும் அதன் இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் ஜமால் துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்டிருந்தார்.
இக்கொலையில் இளவசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு உள்ளதாகவும் கூறி ஆதாரங்களை வெளியிட்ட துருக்கி குற்றவாளிகளைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள போதும் சவூதி அதனை மறுத்துள்ளது.
மேலும்; ஜமால் கொலை வழக்கில் சவூதியால் கைது செய்யப்பட்டுள்ள அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்க அந்நாடு ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.