ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணிலிற்கு விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக இன்று பாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று காலை தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தில் இடம்பெற்ற திடீர் சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த கோரிக்கையை நிராகரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்களது தீர்மானத்தை மாற்ற முடியாது என குறிப்பிட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பிற்கு அழைத்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.