Home இலங்கை மகிந்த உள்ளிட்ட 49 பாராளுமன்ற உறுப்பினர்களின் மனு ஒத்திவைக்கப்பட்டது…

மகிந்த உள்ளிட்ட 49 பாராளுமன்ற உறுப்பினர்களின் மனு ஒத்திவைக்கப்பட்டது…

by admin

பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 49 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமராகவும் அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களாக பதவிவகிப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத்தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவினை மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றையதினம் குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மனுவினை எதிர்வரும் ஜனவரி மாதம் 16, 17, 18 ஆகிய திகதிகளில் தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையறையினர் மற்றும் ; விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More