குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பூநகரி முட்கொம்பன் சந்தைக்கு வெளியில் உள்ள வியாபார நிலையங்களில் மரக்கறிகள் விற்பனை செய்யப்படுவதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தைக்குள் மூன்று மரக்கறி வியாபாரிகள் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இவர்களின் இருவர் அன்மையில் தங்களது வியாபாரத்தை நிறுத்தியுள்ள நிலையில் ஒருவர் மாத்திரம் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றார். இவரும் தொடர்ந்தும் வியாபாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலையில் காணப்படுகின்றார்.
காரணம் சந்தைக்கு வெளியில் சில பல்பொருள் வியாபார நிலையங்களில் மரக்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் பொது மக்கள் சந்தைக்குள் வருவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே பூநகரி பிரதேச சபையினர் இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் ஐயம்பிள்ளை அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த விடயம் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பில் சந்தைக்கு வெளியில் மரக்கறி விற்பனையில் ஈடுபடுகின்ற இரண்டு வர்த்தகர்களுக்கு அதனை நிறுத்துமாறு அறிவித்தல் விடுத்த போதும் அவர்கள் இதுவரை அதனை மேற்கொள்ளவில்லை எனவே உடனடியாக அவர்களுக்கு கடிதம் மூலம் மரக்கறி வியாபாரத்தை நிறுத்துமாறு அறிவிக்கப்படும். எனத் தெரிவித்தார்.