குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை கொடுப்பதைப் போன்று நல்ல வேலை செய்பவர்களுக்கு பாராட்டுவிழா நடாத்துவது அவசியமானது. அந்தவகையில் இந்த முன்பள்ளி ஆசிரியர்களை நான் பாராட்டுகின்றேன் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
பெரியவர்களுக்கு படிப்பு சொல்லிக்கொடுப்பது பெரிய காரியமல்ல ஆனால் இந்த முன்பள்ளி குழுந்தைகளுடன் செயலாற்றுவது மிக மிக கஸ்டமான காரியமானது. அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தவது மேலும் மேலும் அவர்களின் சேவை வளரும்.
முன்பள்ளி ஆசிரியர்களை பொறுத்தவரையில் தகமை புலமை மட்டும் இருந்தால் போதாது அவர்களுக்கு அன்பு கருணை பாசம் போன்றவை இருக்க வேண்டும். குழந்தைகள் மீது ஒரு தாய் போன்ற பாசம் காட்ட வேணும். வீட்டிலே கிடைக்காத அன்பு முன்பள்ளியிலே கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் சிறந்த குழந்தைகளாக வளர்வார்கள். குழந்தைகளின் முகத்தில் இனம் தெரியாது மதம் தெரியாது என்ன சாதி என்று தெரியாது அவர்கள் அனைவரும் குழந்தைகளாக மட்டுமே தெரிவார்கள். அவர்களை குழந்தையிலிருந்தே ஒற்;றுமையாக வாழ பழக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
யாழ் மகளிர் கல்லூரியில் வடமாகாண முன்பள்ளியின் கண்காட்சியும் கலாச்சாரவிழா நிகழ்வினை நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது இதனை தெரிவித்துள்ளார்.