மகிந்த ராஜபக்ஸவும், அவரது அமைச்சர்களும் பிரதமராகவும், அமைச்சர்களாகவும் செயற்படுவதற்குத் இடைக்காலத் தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிரான மேன்முறையீட்டு மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
மகிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது அமைச்சர்கள் சார்பில் இந்த மனு உயர்நீதிமன்றத்தில் , மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை நீக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை, நீதியரசர் ஈவா வணசுந்தர தலைமையிலான, மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.
எனினும், இந்த மனுவை நீதியரசர் ஈவா வணசுந்தர பங்கேற்காத – உயர்நீதிமன்றத்தில் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழுவே விசாரிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்புகள் நேற்று மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
மகிந்த ராஜபக்ஸவின் சட்டக்கல்லூரித் தோழியான நீதியரசர் ஈவா வணசுந்தர, மகிந்த ராஜபக்ஸவினாலேயே உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார். இருவரும் நெருங்கிய நட்புள்ளவர்கள் என்பதால், மகிந்த ராஜபக்ஸவின் மனுவை நீதியரசர் ஈவா வணசுந்தர விசாரிக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.