முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சென்னையிலிருந்து வந்த வருமான வரித்துறை உதவிஆணையாளர் வீரராகவன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் இந்த விசாரணையை முன்னெடுத்திருந்தது.
11.30 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 7 மணி வரை சுமார் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக இடம்பெற்றது. அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பெரும்பாலும் தெரியாது, ஞாபகம் இல்லை என்றே அவர் பதிலளித்ததாக கூறப்படுகிறது.
குறித்த விசாரணை விபரங்கள் காணெளியில் பதிவு செய்யப்பட்டதுடன் குறித்த பதிவுகள் அச்சிடப்பட்டு கையெழுத்தும் பெறப்பட்டது. இந்நிலையில் இன்று 2ஆவது நாளாக சசிகலாவிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. இதேவேளை சசிகலாவிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆரம்பிக்கவுள்ளனர்.