ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விரைவில் பிரதமராக மீண்டும் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தனது பதவியை ராஜனாமாச் செய்த பின், நாளை அல்லது நாளை மறுதினம் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றின் தீர்ப்பை தான் மதிப்பதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கப் போவதில்லை என அடம்பிடித்தார். எனினும் இன்று (14.12.18) ஜனாதிபதிக்கும், ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து நிபந்தனைகளுடன் ரணில் பிரதமராவதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.