140
2ஆம் இணைப்பு – பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தில் மகிந்த ராஜபக்ஸ கையொப்பமிட்டுள்ளார். இன்று காலை விஜேராம இல்லத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளின் பின்னர், பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மகிந்த ராஜபக்ஸ இதனைத் தெரிவித்ததாக ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
Spread the love