நைஜீரியாவின் வடகிழக்கில் ஐ.நாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. தீவிரவாதக் குழுக்களுக்கு உளவு வேலை பார்ப்பதாக குற்றம்சுமத்தி யுனிசெப் அமைப்புக்கு நைஜீரியாவின் வடகிழக்கில் செயல்பட மூன்று மாத தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது அந்தத்தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
யுனிசெப் அமைப்பின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற அவசரப் பேச்சுவார்தைக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
போக்கோ ஹராம் தீவிரவாத அமைப்பின் ஊடுருவலால் வடகிழக்கு நைஜீரியாவில் இருந்து குடிபெயர்ந்த பல லட்சம் மக்கள் உதவிகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது