Home உலகம் அவுஸ்திரேலியா மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பு

அவுஸ்திரேலியா மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பு

by admin


மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர்  ஸ்கொட் மொரிசன்   தெரிவித்துள்ளார்.  யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என தெரிவித்து வருகின்றது. எனினும் இது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதுடன் பாலஸ்தீனர்களும் கிழக்கு ஜெருசலேமை தங்கள் தலைநகராக கருதுகிறார்கள்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்திருந்ததுடன் அங்கு தனது புதிய தூதரகத்தையும் திறந்தது.
அமெரிக்காவை தொடர்ந்து குவாத்தமாலா உள்ளிட்ட சில நாடுகளின் தூதரகமும் ஜெருசலேம் நகரில் திறக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அவுஸ்திரேலியா அங்கீகரித்திருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். எனினும் அமைதி உடன்படிக்கை ஏற்படும்வரை தூதரகத்தை டெல்அவிவ் நகரில் இருந்து மாற்ற மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More