மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்த குவாத்தமாலா நாட்டைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் அமெரிக்க எல்லை காவல் படையினரின் காவலில் இருந்தபோது, உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜகெலின் கால் மாகுயின் என்ற குறித்த சிறுமி தனது தந்தையோடு சேர்ந்து கடந்த வாரம் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை கடந்து வந்த பின்னர் தடுத்து வைக்கப்பட்டார்.
சிறுமி தடுப்புக்காவலில் இருந்தபோது பல நாட்களாக உணவோ, தண்ணீரோ கிடைக்காத நிலையில் நீர்சத்து குறைந்தே சிறுமி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்ததாக செய்தி நிறுவனம் ஒன்றினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தடுப்புக்காவலில் இருந்தபோது அவர்களுக்கு உணவும், நீரும் கொடுக்கப்பட்டது என எல்லையிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் சிறுமி உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது