117 ஆண்டுகளுக்குப் பின்னர் பிலிப்பைன்ஸின் மணிகளை ஒப்படைக்க அமெரிக்கா சம்மதித்துள்ளது. பிலிப்பைன்சுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இடம்பெற்ற போரின் போது 1901ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் படையினரால் 48 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டமைக்கு பதிலடியாக, மூன்று தேவாலய மணிகளை அமெரிக்கா எடுத்துச் சென்றது.
அந்த வெண்கல மணிகள் பிலிப்பைன்ஸில் விடுதலையின் சின்னமாக பார்க்கப்படுவதால், அதைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பிலிப்பைன்ஸ் அரசு பல ஆண்டுகளாக அமெரிக்காவிடம் கோரக்கை விடுத்து வந்தது. எனினும் அவை தங்கள் வெற்றிக் கேடயங்கள் எனத் தெரிவித்த அமெரிக்கத் தரப்பினர் அதனை மீள ஒப்படைக்க மறுத்து வந்துள்ளனர். இந்தநிலையில் தற்போது 117 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மணிகளைத் திரும்ப ஒப்படைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது