பிரதமராக இன்று காலை பதவியேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக ஈ.எம்.எஸ்.பீ. ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 3ஆவது தடவையாகவும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை நிர்வாகப் பிரிவில் ஓய்வுப் பெற்ற அதிகாரியான இவர், குறித்த துறையில் 30 வருடங்கள் அனுபவமிக்கவரும் பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பாடம் தொடர்பில் சிறப்பு பட்டதாரியுமாவார்.
அத்துடன் ஏக்கநாயக்க ஐக்கிய நாடுகள் அமைப்பின் வீட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பில் இலங்கையின் பிரதானியாக செயற்பட்டுள்ளதுடன், மலேசியா மற்றும் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகங்களிலும் கடமையாற்றியுள்ளார்.