195
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற 14வது உலககிண்ண ஹொக்கிப் போட்டியில் பெல்ஜியம் அணி சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெனால்டி சூட் முறையில் நெதர்லாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது
இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்தும், அவுஸ்திரேலியாவும் போட்டியிட்ட நிலையில் 8 – 1 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று வெண்கலம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love