காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிரிவினைவாதிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக புல்வாமா மற்றும் ஸ்ரீநகரில 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்குதல் மேற்கொண்ட போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் பொதுமக்களில் 7 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புல்வாமா மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்த பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.
அத்துடன் ; இன்று தலைநகர் ஸ்ரீநகரில் பதாமி பாக் என்கிற இடத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தை நோக்கி பொதுமக்கள் பேரணி நடத்தவும் அந்த அமைப்புகள் அறிவுறுத்தி உள்ளன. இதனையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக புல்வாமா மற்றும் ஸ்ரீநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும் 2 மாவட்டங்களிலும் கைத்தொலைபேசி இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது