முடிந்தால் பாராளுமன்றைக் கலைப்பதற்கான யோசனை ஒன்றை முன் வைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன சவால் விடுத்துள்ளார்.
அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து அதில் வெற்றியும் பெறப்பட்டுள்ளது. இந்தநிலையில் மக்களை மதிக்கும் பிரதமர் என்றால் நாளையே பாராளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனையொன்றை முன்வைக்கவும். ஏனெனில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான காலம் இப்போது சரியென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பாளுமன்ற கலைப்புத் தொடர்பான யோசனைக்கு தாம் கையுயர்த்த தயாராகவிருப்பதாகவும் மக்களின் அபிலாசைகளை அழிக்க 117 பேருக்கு இடமளிக்கப்படாது எனவும் தெரிவித்த அவர் நாளையே இந்த யோசனையை முன்வைக்குமாறு சவால் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.