ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டதன் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களிடம் ஆற்றிய உரை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு ஜனாதிபதிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
அந்தவகையில் கிராமங்களில் மங்கள நிகழ்வுகள் ஏற்பாடு பண்ணும் போது, இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசுவார்கள். தனக்கு தெரிந்தவரை மணமகனை சபைக்கு அழைத்து மணமகன் தரப்பில் பேசுபவர் மணமகனை விமர்சித்து பேசுவதைப் போன்றே நேற்று ஜனாதிபதியின் உரை அமைந்திருந்ததாக நளின் பண்டார தெரிவித்துள்ளார்.